Tuesday, January 25, 2022

மோதிரக் கைகளும், மகத்துவக் குட்டுகளும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மோதிரக் கைகளும்,

மகத்துவக் குட்டுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கே சொற்களில் ஒரு கவிதைத்தொகுப்பைப்
பற்றிய முழுநிறைவான விமர்சனம் சாத்தியமா?
மந்திரமாவது சொல்
தந்திரமன்றி விமர்சனமில்லை என்றுகொள்
முன்முடிவுக்கேற்ப
தன்னிச்சையாகவோ
ஒருமித்த கருத்தாகவோ
’அவசியம் படிக்கவேண்டும் அனைவரும்’
என்றோ
’அனாவசியம். யாருக்குமே படிக்கப் பிடிக்காது’
என்றோ
எழுதிவிட்டாலாயிற்று.

அடிக்குறிப்பு:
இரண்டாயிரமோ இருபதாயிரமோ சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைக்கு இருப்பதெல்லாம் மோதிரக்கைகள்தானே!

No comments:

Post a Comment