Monday, August 2, 2021

மெய்யுணர்தல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்யுணர்தல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

விசுவரூபம் இயல்பாயிருக்குமொருவர்க்கும்
விசுவரூப வேடந்தரித்த ஒருவருக்கு
மிடையேயான
ஆறுவித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச் சொல்லிக்
கேட்டிருந்த புதிர்ச்சித்திரத்தில்
குறைந்தபட்சமாக அறுநூறு வித்தியாசங்களைக்
கண்டுபிடிக்க முடிந்ததில்
விசுவரூப வேடந்தரித்தவரை
வெகு இயல்பாய்க் கடந்துசெல்லவும்
விசுவரூபமே இயல்பாய்க் கொண்டவரை
வெகு இயல்பாய் விழுந்து வணங்கவும்
முடிகிறது.

No comments:

Post a Comment