Monday, August 2, 2021

5. பின் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

5. பின் கதை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



முன்பின் உண்டோ இதுபோன்றதொரு இன்கதை

என்றவரிடம்


ஏற்கெனவே இந்தக்கதையைப்


படித்திருக்கிறேன்


என்றொரு வாசகர் சொல்ல


உடனடியாக அதற்கு மறுப்புத்


தெரிவிக்குமாறும்


அல்லது விடுபட்ட ’இதைப்போன்ற’


உடனடியாக


சேர்க்கப்படவேண்டுமென்றும்


அன்பின் மிகுதியால் படைப்பாளி


காட்டமாய்க் கேட்டுக்கொண்ட


ஆறாவது நிமிடத்தில்


குருதிவெள்ளம்


உடைப்பெடுக்கும்படியாக


அந்த நல்வாசக நெஞ்சாங்கூட்டில்


அதிரடியாக நுழைந்து துளைத்தது


துருப்பிடித்த தோட்டாவொன்று.

No comments:

Post a Comment