Thursday, May 2, 2019

விசாரணை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


விசாரணை
 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


வினையை எதிர்வினையாக்கி எதிர்வினையை வினையாக்கி
தீராத வினை தீராமலேயிருக்கும்படி முனைப்பாகப் பார்த்துக்கொண்டு
எதிர்மறையாய் பனையைத் தினையாக்கி தினையாய் பனையாக்கி
பேசிய நூறாயிரம் சொற்களில்
பதிவான நாலே நாலு சொற்களை
கனம் கோர்ட்டார் முன் வீசியெறிந்து
தன் தரப்பைப் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டவரைத்
திரும்பத்திரும்பக் குற்றவாளியாய் தீர்ப்பெழுதுகின்றன சில கரங்கள்
இறப்பின் இந்த முனையிலிருந்து.
தெருத்திருப்பத்தின் அந்த முனையிலான திடீர் மேடையிலிருந்து டி.எம்.எஸ் விசாரணையைத்தொடங்குகிறார்:
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?


No comments:

Post a Comment