Wednesday, March 20, 2019

என்றும் நிலுவையிலிருக்கும் வழக்கு. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


என்றும் நிலுவையிலிருக்கும் வழக்கு.

ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஊருக்கு இளைத்தவர்
வழியிலுள்ள பிள்ளையார் கோயில் ஆண்டி அல்லர் _
யாருக்கும் இங்கே இளைத்தவராயிருப்பவர்
எளிய மொழிபெயர்ப்பாளர்.

நினைத்தபோதெல்லாம் மொழிபெயர்ப்பாளரை
பழித்துக்கொண்டேயிருக்கலாம்
இலக்கியத்தைப் புரந்து காப்பதா யதற்குப்
பொழிப்புரை எழுதலாம்.

களித்துமகிழ வேண்டுமா
காலால் எட்டியுதைக்கலாம் அவரை;
காலேயரைக்கால் வரியை மொழியாக்கம் செய்யாதவரும்
காமெடி பீஸாக்கலாம் அவரை;

கொந்தளித்தெழுந்து பல்லுயிரைக் குடித்த ஆழிப்பேரலையும்
நகைச்சுவைத்துணுக்காகும்போது
மொழிபெயர்ப்பாளரைப் பழிக்கக்கேட்டு
கெக்கெபிக்கெ யென்று சிரித்துமகிழ
ஆட்களாயில்லை?

No comments:

Post a Comment