Tuesday, January 29, 2019

ME TOO MOVEMENTஐ மதிப்பழிக்கும் ‘மாதர் குல மாணிக்கங்கள்’


ME TOO MOVEMENT மதிப்பழிக்கும் 
மாதர் குல மாணிக்கங்கள்

பொதுவாகவே இந்த மெகா சீரியல்கள் பெண் குறித்த பிற்போக்கான கருத்துகளையே திரும்பத்திரும்ப முன்வைக்கின்றன என்பது ஊரறிந்த விஷயம். இரவு பனிரெண்டு மணிக்குக்கூட குடை டோலக்கும் கெட்டி சரிகைப்புடவையும் கழுத்தே தெரியாத அட்டிகை களுமாய் பெண்களைக் காட்டிக்காட்டியே பிழைப்பு நடத்துகிறார்கள். எதற்கும் இருக்கட்டுமே யென்று திடீரென பார்வையிழந்த ஒரு குழந்தை அல்லது தள்ளாத பாட்டியைக் காட்டி மனித நேயம், சமூகப் பிரக்ஞை என்று பேசுவார்கள். பின்மீண்டும்  புடவைக்கடை, நகைக்கடை விளம்பரங்களாகி 
விடுவார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் வாணிராணி இன்னும் எண்ணாயிரம் வருடங்களுக்கு மெகா சீரியலாக வந்துகொண்டிருக்கும் என்று தோன்று கிறது. தங்கள் பணப்பெட்டிகளை நிரப்ப நாடகம் என்ற பெயரில் அபத்தக் களஞ்சியமாக ஒன்றை இத்தனை காலமாக நீட்டித்துக்கொண்டேயிருக்க எத்தனை ஆணவத் துணிச்சல் தேவை.

இன்று சாமானியர்களுக்கும் கைபேசியில் உரையாடல்களைப் பதிவுசெய்ய முடியுமென்று தெரியும். ஆனால் வாணிராணி இளைஞர்கள் தங்களைப் பணம் கேட்டு மிரட்டும் இளம் பெண்ணின் மிரட்டல் பேச்சைப் பதிவு செய்வது பற்றிய எண்ணமேயில்லாமல் ஊரில் உலகில் இருக்கும் ஒரேயொரு போலீஸ்காரரான அவர்களது சகோதரன் கௌதமை உதவி செய்யக் கேட்டுக்கொண்டே யிருப்பார்கள். அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.

போதாததற்கு இப்போது அந்தப் பெண்ணைப் பற்றிக் கருத்துரைப்பதாய்மீ டூஇயக்கம் பற்றி கிண்டலாய்(அந்த இயக்கமே ஏதோ ப்ளாக்மெயில் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுபோல்) கருத்துரைக்கத் தொடங்கியிருக் கிறார்கள். ஒரு பெண்ணின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த மீடியா நிறுவனத்திலிருந்து இந்தக் கேவலமான வசனங்கள் வெளியாகத்தொடங்கி யிருக்கின்றன. (இந்த நாடகத்தின் இயக்குனர் குறித்தே ஒரு பெண் மீ டூ இயக்கத்தின் குரலாய் புகார் கூறியிருந்ததும் இணையத்தில் இருக்கிறது).

சுஹாசினி வாயே திறக்கவில்லை. குஷ்புவோஎனக்கு நடக்கவில்லை, நான் பார்க்கவில்லை, எனவே, நான் எப்படி கருத்துரைக்க முடியும் என்கிறார். அப்படி யெனில் திருமணமாகாத எல்லாத் தமிழ்ப்பெண்களைப் பற்றியும் (அவர்களின் நலனுக்காகவே, உரிமைக்கா கவே பேசியதாய் பின்னாளில் பெண்ணியவாதிகள் உட்பட அவருக்காகக் குரல்கொடுத்தார்கள் என்றாலும் தமிழ்ப்பெண்களைப் பற்றிய அவர் கருத்து highly frivolous என்பதே உண்மை) , அவர்கள் சார்பாகவும் அவர் எப்படி அன்று கருத்துரைத்தார்? ராதிகாவோ தன் ஜவ்வுத் தொடரின் மூலம் இந்த இயக்கத்தைக் கேலிபேச, பழித்துரைக்க ஆரம்பித்திருக்கிறார். Shame on them.

No comments:

Post a Comment