Tuesday, July 10, 2018

தனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தனிமொழியின் உரையாடல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை
உண்மையில் காட்டமுடியுமா உன்னால்”

”உங்கள் கனவுகளிலிருக்கும் ஆற்றைக்கடந்துதானே அவை என்னை அடையாளம் கண்டு வந்தடைகின்றன!”

”என் கனவுகள் எனக்கே தெளிவாகாதபோது நீ யார்
அவற்றில் நதிகளை வகுத்துரைக்க?”

உங்கள் உள்ளாழ நிலவறைகள் சிலவற்றின் திறவுகோல்கள்
என்னிடமிருக்கின்றன!”

”களவாணியா நீ?”

“கவி”.


No comments:

Post a Comment