Monday, May 21, 2018

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல்


நான் ஏன் 
நரேந்திரமோதியை ஆதரிக்கிறேன்?
திரு.மாரிதாஸின் நூல்  
 கிழக்கு பதிப்பக வெளியீடு
(பக்கங்கள் : 256 /  விலை  ரூ.225
-    தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com




நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்
_ லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை இணைய இதழில் வெளியானது)










கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே இருப்பது இன்றைய நிலவரம்.
.
ஆளுக்கொரு கட்சியைச் சார்ந்திருப்பவர்கள், அவரவருக்கென்ற மத அடையாளங்களுடன் இருப்பவர்கள் பொதுவெளியில் திரு. மோதியை எத்தனை ஆக்ரோஷமாக, கொச்சையான வார்த்தைகளால், மிக வன்முறை யார்ந்த வார்த்தைகளால் தொடர்ந்து வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வியப்பாயிருக்கும். 

அரசியல் மேடைகளிலெல்லாம் அமைதிப்புறாவோ, நியாயத்தராசோ, நிஜம் எழுதும் பேனாவோ தரப்படாமல் வீரவாளே பெரும்பாலும் பரிசாகத் தரப் படுவதைப் பார்க்கும்போது ஒருவேளை நாம் இன்னும் வாரிசுதார மன்ன ராட்சித் தாக்கத்திலிருந்து விடுபடவில்லையோ, எளிய வாழ்க்கைப் பின்பு லத்திலிருந்து வந்தவர் என்பதுகூட பிரதமர் மோதிக்கான சிலரின் எதிர்ப் புக் உளவியல்ரீதியான காரணமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றும்.

இனக்கலவரம், மதக்கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததேயில்லை என்பது போன்று சிலர் பேசிவருவதையும்,  பா.ஜ.க ஆட்சியில் இனக்கலவ ரமும் மதக் கலவரமும் தலைவிரித்தாடுவது போலவும், மத அடிப்படை வாதத்துக்கு ஊழலே மேல் என்று சில கட்சிகள் வெளிப்படையாகவே ஊழலை ஆதரித்துப் பேசிவருவதையும், இந்தியாவின் மற்ற மாநிலங் களில் சமத்துவம், சமநீதி குறித்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் குறைவு, தமிழ்நாட்டில்தான் அவை அதிகம் என்பதாகவும், அச்சு ஊடகங் களிலும் ஒலி-ஒளி ஊடகங்களிலும் நாள் தவறாமல் சிலர் கருத்துரைத் தபடியிருப்பதையும் அவர்களுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் கிடைப்பதையும் காணமுடிகிறது. 

மோதி ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தி னருக்குப் பாதுகாப்பில்லை என்பதாய் ஒரு பயம் திட்டமிட்டரீதியில் மக்களிடையே பரப்பப்பட்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. ஊரில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் பிரதமர் மோதியே காரணமாகச் சுட்டப்படுகிறார். இது எவ்வளவு தூரம் சரி என்று யாரேனும் கேட்கத் துணிந்தால் அவர்கள் பிற்போக்குவாதிகள், அடிப்படைவாதிகள், அராஜகவாதிகள் என்று பகுப்பதே அறிவுசாலித்தனமாக இருக்கிறது.

முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் கட்சிகளால் நடத்தப்படுபவை, கட்சி சார்புடையவை, என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே இவற்றில் ஒரு விவாதம் நடத்தப்படும்போது எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருள் குறித்த வல்லுனர்கள் அதிகம் இடம்பெறு வதில்லை என்பதோடு சேனல் ஆதரிக்கும், அல்லது சேனலை நடத்தும் அரசியல்கட்சி எந்தக் கருத்தை பொதுவெளியில் வைக்க, வலியுறுத்த விரும்புகிறதோ அந்தக் கருத்தை ஆதரிக்கும் பேச்சாளர்கள் மூவரும் எதிர்க்கும் பேச்சாளர் ஒருவரும் என்ற விகிதாச்சாரத்திலேயே விவாதத் தின் பங்கேற்பாளர்கள் தேர்வுசெய்யப்படுவது கண்கூடு.

கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் பொது என்ற உண்மையை ஏற்க மறுப்ப வர்களாய் இந்துமதம் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும் சில கருத்துகளை வெளியிடுபவர்களை மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்துவதும், அறிவீலிகளாய், அகங்கார மனிதர்களாய் அவர்களை அடையாளம் காட்டுவதும் மறைமுகமாய் அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மாற்றுக் கருத்துடையவர்களை முட்டாள்கள் என்பதும், மனிதநேய விரோதிகள் என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்களும் கடைப்பிடிக்கும் வழிமுறையாக இருக்கிறது.

இந்தச் சூழலில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும்,  திரு. மாரிதாஸ் எழுதியுள்ள, ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்ற நூல் படிக்கக் கிடைத்தது. இந்தியாவை நேசிக்கும் இளைய தலைமுறையின ருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த நூலில் இடம்பெற்றிருப் பவை மாரிதாஸின் முகநூலில் வெளியாகியவற்றின் செழுமைப்படுத்தப் பட்ட வடிவம் – பலர் அவரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு முகநூலில் பதில் அளித்திருந்தார்’ என்ற விவரம் நூலில் தரப்பட்டிருக்கிறது.

’ஒர் ஏழை இந்துக் குழந்தை முதல் இஸ்லாமிய வீட்டு ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை வரை அனைத்து இந்தியக் குடும்பங்களின் வாழ்வும் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் என் எண்ணமே ஒழிய வேறு இல்லை. என் அக்கறை என்பது மதவாதம் சார்ந்த விஷயம் அல்ல; இந்த மண்ணின் எதிர்காலம் சார்ந்த விஷயம்’ 
என்று என்னுரைப் பகுதியில் குறிப்பிடும் நூலாசிரியர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எது தவறு, எது சரி என்று கூறுவதைவிட எது உண்மை என்று கூறிவிடவேண்டும் என்பதால் இந்தப் புத்தகத்தை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

நூலாசிரியர் பற்றிய சிறு அல்லது விரிவான விவரக்குறிப்பு நூலில் தரப் படவில்லை. அவசியம் தரப்பட்டிருக்கவேண்டும். இந்த நூல் என்றில்லை. பொதுவாகவே நம் தமிழ்நூல்களைப் பொறுத்தவரை பல நூல்களில் பரவலாகத் தெரிந்த படைப்பாளி என்ற எண்ணத்தாலோ என்னவோ நூலாசிரியர் குறித்த சிறுகுறிப்பு இடம்பெறுவதில்லை. இன்று எத்தனை பரவலாகத் தெரிந்தவராயிருந் தாலும் வருங்கால சந்ததியினரும் இந்த நூல்களைப் படிப்பார்கள் என்ற உண்மையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவர்களுக்கு நூலாசிரியர் யார் என்று அறிமுகம் செய்துவைக்கவேண்டிய தேவையிருக்கிறது. எனவே, தமிழில் வரும் புனைவு, அ-புனைவு நூல்க ளுக்கும், மொழிபெயர்ப்புநூல்களுக்கும் நூலாசிரியர் குறித்த அறிமுகம் விரிவாகவே இடம்பெறவேண்டியது அவசியம். இதை நூலாசிரியர்களும், பதிப்பாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

’இந்தப் புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம், துறைமுகம், மீத்தேன் வாயுத்திட்டம், சாகர்மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன’ என்று தெரிவிக்கும் பின்னட்டை Blurb ’இந்த நூல் குறித்து எழுதப்பட்டுள்ள மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திரமோதியின் மீதும் பி.ஜே.பி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டுள்ளது’ என்று தன்னிலை விளக்கம் தருகிறது.

நூலில் இடம்பெறும் கேள்விகளும் அவற்றிற்குத் தரப்பட்டிருக்கும் அகல் விரிவான பதில்களும் சிந்திக்கத் தூண்டுபவை. சில பதில்கள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் படிக்க சுவாரசி யமான நூல். இத்தகைய நிதான மான, தர்க்கரீதியான உரையாடலுக்கான வெளி விரிவடைவது மக்களாட்சிக்கு நல்லதே.

Ø   

No comments:

Post a Comment