Thursday, January 26, 2017

ஆபாசம் என்பது.....

ஆபாசம் என்பது.... 



ஆபாசம் என்பதை பெண்ணின் உடல், ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது பலருக்குப் பழக்கமாகி விட்டது; வசதியாக இருக்கிறது. ஆனால், குழந்தை களைக் கிளிப்பிள்ளைகளாகப் பழக்கப்படுத்தி சில கருத்துகளைப் பேசவைப்பதும், கொடிபிடிக்க வைப்பதும் கூட ஆபாசம் தான்.

என்னுள்ளிருக்கும் ஒரு சிறுமி என்னிடம் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறாள்:

சினிமாவில் ஒருவர் நூறு பேரை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்ளும் அசாத்தியமான காரியத்தைத் திரும்பத்திரும்ப வீரசாகசமாகக் காட்டிவரும் திரைப்படத்துறையினர், இப்போது மட்டும் ஒரு காளையைப் பலர் துரத்தி விரட்டி வெருட்டிப் பிடித்து அடக்கப் பார்ப்பதை எப்படி வீரம் என்று சித்தரிக் கிறார்கள்?”






No comments:

Post a Comment