Tuesday, May 21, 2019

ANAAMIKAA ALPHABETS BOOKS FOR CHILDREN

 ANAAMIKAA ALPHABETS 
BOOKS FOR CHILDREN
KINDLE BOOKS AND PAPERBACK BOOKS 

https://www.amazon.ca/s?k=LATHA+RAMAKRISHNAN&ref=nb_sb_noss

https://www.amazon.ca/s?k=ANAAMIKAA+ALPHABETS&ref=nb_sb_noss










UPs & DOWNs a blogger’s musings _ G.VENKATESH - KINDLE BOOK

 UPs & DOWNs

a blogger’s musings

_ G.VENKATESH 

ALPHABETS - KINDLE BOOKS - 

https://www.amazon.ca/s?k=LATHA+RAMAKRISHNAN&ref=nb_sb_noss

https://www.amazon.ca/s?k=ANAAMIKAA+ALPHABETS&ref=nb_sb_noss
About the Author: Born and brought up in Matunga, Bombay. Studied in

a missionary school; studied Mech. Engineering {B. E] from V.J T Institute
Bombay; Have worked in several Engg. organisations in Bombay. Now, Retired and settled in Mylapore, Chennai.


“I would  like to leave my footprints in this world ; some sweet, others bitter so that those that follow are better prepared and equipped to handle. Hence this book comprising select articles from my blog ()” says author G.Venkatesh.


He can be contacted atv_enkat8@yahoo.co.in




A FEW WORDS TO SAY ABOUT THIS VOLUME…..

LATHA RAMAKRISHNAN
(ANAAMIKAA ALPHABETS)

‘Life is a Game of Cards’ - so I have read somewhere. In one shuffle some come together. In the next shuffle they don’t. same way, I chanced to meet Mr.G.Venkatesh, the author of this book in the park where Padmini Madam whom I adore and respect a lot and myself used to visit occasionally. When he heard about our blogs he expressed a desire to have one for himself. Soon his blog www.venkiviews.blogspot.in was launched. My Tamil translations of his articles too started getiing uploaded in his blogspot.

His blemishless English and his interesting anecdotes and observations and the range of subjectsdealt by him in his write-ups made me feel that it would be nice if his wiritngs are compiled in a book form. It was originally printed and published as a bilingual volume with the musings of blogger Mr.G.Venkatesh translated into Tamil by me. But, in Kindle book form just the author’s English articles are there as the Tamil font proved troublesome. Hope to include the Tamil versions too as early as possible

பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

பாரதியார் - பன்முகங்கள்பல்கோணங்கள் - 
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 
Kindle Edition ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 

https://www.amazon.ca/s?k=LATHA+RAMAKRISHNAN&ref=nb_sb_noss

https://www.amazon.ca/s?k=ANAAMIKAA+ALPHABETS&ref=nb_sb_noss


பாரதியார் - தமிழில் எழுதிய கவிஞரென்றாலும் அவர் எழுத்துகள் உலக மக்களுக் கானவை. சுதந்திர தாகம் கொண்டஒரு மனதின் எழுச்சி மிகுந்த குரல் அவற்ரில் வெளிப்படுகின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றும் ஒரு இலட்சியார்த்த உலகை முன்மொழிந்து வழிமொழிந்த கவிதைகள் பாரதியின் கவிதைகள். அவருடைய கவிதைகளில் வெளிப்படும் மனிதநேயம். சமத்துவம், சகோதரத்துவம் என்பதான பல அம்சங்களைப் பற்றி விரிவாகப் பேசும் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழின் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப் பாளருமான டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் இங்கே ஒரு தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
Links

 ஏன் இந்த  நூல்?
லதா ராமகிருஷ்ணன்

பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக் கின்றன. இனியும் வெளிவரும். அத்தனை அகல்விரிவும் பல்பரிமாணமும் கொண்டது பாரதியின் கவித்துவம்.

பாரதி ஒருவரென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம்.
எனவே பல வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்கள் உண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவற்றை உள்வாங்கிக்கொள்பவர்கள் உண்டு.

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை.

பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாக நினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய் விட்டு அவற்றை உரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில் நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார். குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமே பார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால், என்ன நல்லது, செறிவானது செய்தாலும் மனமாரப் பாராட்டுவார்.

அவர் மொழிபெயர்த்துள்ள படைப்புகள் - ஜெயகாந்தன் எழுத்தாக்கங்கள், பாரதியினுடைய கவிதைகளின் ஆங்கில

மொழிபெயர்ப்பு நவீன தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு, CODE NAME GOD  என்ற உலகப்புகழ் பெற்ற நூலின்
மிகச் செறிவான தமிழ்மொழியாக்கம் - கடவுளின் கையெழுத்து -- ஆன்மீகம் - அறிவியலின் சந்திப்புப் புள்ளி களைத் தொட்டுக் காட்டுவது, ‘சிந்தனை ஒன்றுடையாள்என்ற சமஸ்கிருதம் - தமிழ் ஆகிய இரு செம்மொழி களிலான வாழ்வியல் - இலக்கியப் பாலத்தை எடுத்துக் காட்டும் நூல், அனுபவச் சுவடுகள் என்ற நினைவுக்குறிப்புக் கட்டுரைகளடங்கிய நூல் - மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் தமிழ்க் கட்டுரைகள் அடங்கிய தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.

பாரதியாரின் பல்பரிமாணங்களைப் பற்றி டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் விரிவாக எழுதியுள்ள கட்டுரை களை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள் சிலவற்றில் படிக்கக் கிடைத்தபோது இவையனைத்தும் ஒரே தொகுப்பாக வெளிவந்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது.

அப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வர அவரிடம் அனுமதி கோரிய போது, வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் சில கருத்துகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டிருக்குமே என்று தயங்கினார். பரவாயில்லை, ஒருவிதத்தில் அவை பாரதியின் சில முக்கிய அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும் என்று சொல்லி ஒப்புதல் பெற்றேன். <பாரதியாரின் கவிதைகள் ஒவ்வொன் றும் பல கருப் பொருட்களைப் பேசுபவை; அவ்விதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தலைப்புகளில் இடம் பெறுவதும் இயல்புதான்.

அனுமதியளித்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்க ளுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி.

பாரதியார் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். அவற்றில் சிலவற்றை பாரதியின் மூல கவிதைகளோடு இந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது நிறைவளிக் கிறது.

இந்த நூலின் முகப்பு அட்டைக்கு பரீக்ஷா ஞாநி அவர்களின் பாரதி கோட்டோவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டபோதுஉள்ளது உள்ளபடிவெளியிடுங்கள் என்ற வேண்டுகோளுடன் அனுமதி அளித்தார். அவருக்கும் என் நன்றி உரித்தாகிறது.

தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்

20.3.2017

Tuesday, May 14, 2019

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) மீண்டும் மணிமேகலை! நாடகம் லதா ராமகிருஷ்ணன்

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 

மீண்டும் மணிமேகலை!
நாடகம்
லதா ராமகிருஷ்ணன்






ANAAMIKAA ALPHABETS kindle books - MANIMEKALAI ON THE MOVE A PLAY IN ENGLISH

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்     
(kindle books) 



A PLAY IN ENGLISH
BY 
LATHA RAMAKRISHNAN  


ANAAMIKAA ALPHABETS (kindle books) பாரதியார் பன்முகங்கள் பல்கோணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணியன்

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 



பாரதியார்
பன்முகங்கள் பல்கோணங்கள்

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

Sunday, May 12, 2019

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..? ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


(*மே 12, அன்னையர் தினம்)

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




அன்னையர் தினம்அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும்
அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான
அதலபாதாளத்தை
வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை
எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக்
கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!

·       

[’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து
கவிதை எண். 17.துளிவெள்ளக்குமிழ்கள்(5)]