Tuesday, February 3, 2015

வழுக்குப்பாறை(1925) யாஸுனாரி காவாபாட்டா (பரிசு நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்) ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

வழுக்குப்பாறை(1925)
யாஸுனாரி காவாபாட்டா

(பரிசு நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்)
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்



 2000த்தில் 
 யாசு னாரி காவாபாட்டா 
 என்ற, நோபல் பரிசு 
 பெற்ற ஜப்பானிய 
 எழுத்தாளரின் 
 சின்னஞ்சிறு 
 கதைகள் 50 என் தமிழாக்கத்தில் சிநேகா பதிப்பக வெளியீ டாகப்
  பிரசுரமாகியது.
 அதில்  இடம்பெறும்
வழுக்குப் பாறை’ என்ற கதை ஏறக்குறைய பிள்ளைப்பேறு  குறித்த 
 நம்பிக்கை சார்ந்தது தான். கதை  எழுதப்பட்டு ள்ள  விதத்தில் வரியிடை வரிகள் நிறையவே வாசிக்கக் கிடைப்பதான உணர்வு வரவாகிறது.

யாஸுநாரி காவாபாட்டா

                                                    
தன்னுடைய மனைவி யோடும், குழந்தையோடும் அவன் மலை வெப்ப நீரூற் றுக்கு வந்துசேர்ந்திருந் தான். 

அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப் பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப் பட்டது. 

அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்க ளுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேக மில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூட நம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.

ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத் தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ள ரித் துண்டத்தைப் போலி ருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டி ருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும் போது பெண் குலத் தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும் நான்).

“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்க வேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக் கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்க ளைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடிய லுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந் துகொள்கிறார்கள்.”


“அவர்கள் அப்படிச் செய்வதை இப்பொழுதும் நீங்கள் பார்ப்பதுண்டா?”


”ஆனால், அந்த மரம் பத்து வருடங்களுக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டது. அதிலிருந்து கிடைத்த மரத்துண் ட ங்கள், துகள்களைக் கொண்டு அவர்கள் இரண்டு வீடு கள் கட்டினார்கள்.”


“ம்ம்ம், ஆனால், அதை யார் வெட்டினார்கள்? அதை வெட்டியவன் கட்டாயம் ஒரு தைரியசாலியாகத்தான் இருக்கவேண்டும்.”


“அப்படியில்லை. வெட்ட வேண்டும் என்பது மாவட்ட அலுவலகத்திலிருந்து வந்த ஆணை. எப்படியோ, அந்தப் பழைய நன்னாட்கள் போயே போய்விட்டன.”


இரவு உணவுக்கு முன்பாக, அவனுடைய மனைவி தங் களை அந்த மகோன்னத நீரூற்றில் முழுவதுமாக நனை த்தாள். அந்த நீரூற்று அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், பெண்களை பாக்கியசாலிகளாக்கும் ஊற்றா கக் கருதப்பட்டது அதுவே என்பதால் அந்த நிறுவனத் தின் விலைமதிப்பற்ற ஆபரணமாக அது விளங்கியது. 

அங்கு குளிக்க வருபவர்கள் முதலில் விடுதியிலுள்ளிருக் கும் நீரூற்றில் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிறகு மகோன்னத நீரூற்றுக்கான கற்படிகளில் கீழிறங் கிச் செல்வது நியதி. மூன்று பக்கங்களில் அந்த நீரூற்று மரப்பலகைகளால் ஒரு குளியல் தொட்டியின் வடிவில் வேலியிடப்பட்டிருந்தது. 

நீரூற்றின் அடிப்பகுதி இயற்கையான பாறை. வேலியிடப் படாத பக்கத்தில் ஒரு குளியல் தொட்டியின் வடிவொழுங் கைக் குலைப்பதாய் ஒரு பிரம்மாண்டமான வழுக்குப் பாறை யானையைப் போல் நின்றுகொண்டிருந்தது. அதனுடைய மினுமினுப்பான கருத்த மேற்பரப்பு, வெப்ப நீரூற்றினால் ஈரமாக இருந்தது. வழுவழுப்பாகவும், வழுக்குத்தன்மை வாய்ந்ததாகவும் விளங்கியது. 

இந்தப் பாறையின் உச்சியிலிருந்து நீரூற்றுக்குள் வழுக் கிக்கொண்டே வந்திறங்கினால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் வழக்கிலிருந்ததால் அது வழுக்குப் பாறை என்று அழைக்கப்பட்டது.


இந்த வழுக்குப்பாறையை அண்ணாந்து நோக்கிய ஒவ் வொரு முறையும், “இந்த அமானுஷ்யம் மானுடத்தியே கேலிப்பொருளாக்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தேயாகவேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், இந்த வழுக்குப் பாறையில் வழுக்கிக் கொண் டுபோனால் தங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும் என்று நினைக்கும் மனிதர்கள் எல்லோரும் இந்த மிகப் பெரிய, சகதி அப்பிய முகத்தால் எள்ளிநகையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.


அந்தப் பாறையின் கரிய, சுவரொத்த முகத்தைப் பார்த்து ஒரு கசந்த புன்னகையை வெளியேற்றினான்.


’ஹோ, பாறையே, நீ என்னுடைய ‘பழமை விரும்பி’ மனை வியின் தலையைக் கையிலெடுத்து அவளை நீரூற்றுக் குள் அமிழ்த்தினாய் என்றால் ஒருவேளை நான் சிறிது வியப்படைவேனாயிருக்கும்.’


திருமணமான தம்பதியரும், குழந்தைகளும் மட்டுமே யிருந்த அந்த வெப்ப நீரூற்றில் அவனுடைய மனைவி சற்றே வினோதமாக அவனுக்குக் காட்சியளித்தாள். பல நேரங்களில் தான் அவளை அறவே மறந்துபோயிருந் ததை நினைவு கூர்ந்தான் அவன்.


காதுகளை மூடும் நவீன பாணி சிகையலங்காரத்திலி ருந்த ஒரு  பெண், நிர்வாணமாகப் படிகளில் இறங்கி வந் தாள். ஸ்பானிய மோஸ்தரில் இருந்த ‘ஹேர்-பின்’களைக் கூந்தலிலிருந்து அகற்றி அவற்றை அங்கிருந்த அடுக் கொன்றில் வைத் தாள்.


’ஹப்பா, எத்தனை அழகான யுவதி!’ இதைச் சொல்லிய வாறு அவன் தன்னை நீரூற்றுக்குள் அமிழ்த்திக்கொண் டான். மறுபடி அவள் வெளியே வந்தபோது புதிதாகக் கழு வித் தூய்மைப்படுத்தப்பட்ட அவளுடைய கூந்தல், இதழ் களனைத்தும் அகற்றப்பட்டு ஒரே ஒரு சூலகம் மட்டுமே எஞ்சியிருந்த அழகிய தோட்டப்பூ போல் காட்சியளித் தது.


தன் மனைவியல்லாத வேறொரு பெண் அவளது கணவ னோடு குளியல் தொட்டியில் இருந்தது அவனை மிகவும் சங்கோஜமாக உணரவைத் தது. அதுவும், அந்தப் பெண் ஒரு யுவதியாக இருந்தது வேறு அவனது தர்மசங்க டத்தை அதிகரித்தது. 

அந்த இளம் பெண்ணைத் தன் மனைவியோடு ஒப்பிட் டுப் பார்க்கும் நிர்பந்ததிற்காளான வன் மனதில் சுய வெறுப்பு பெருக்கெடுத்தோட, வெறுமையுணர்வின் வெள்ளச்சுழலில் முற்று மாக மூழ்கினான்.


“நானே அந்த தேவதாரு மரத்தை வெட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பேன். இது என்னுடைய மனைவி. இது என்னுடைய குழந்தை – இந்த வார்த்தைகள் எல்லா வகையான மூட நம்பிக்கை களையும் ரத்தினச் சுருக்க மாகச் சொல்லிவிடுகின்றனவே? சொல்கிறதா, இல்லையா பாறையே?”


அவனுக்குப் பக்கத்தில், நீரின் வெப்பத்தால் சிவந்து போயிருந்த மேனியோடு மேனியோடு அவனுடைய மனைவி, ஓய்வாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.


அந்த நீரூற்றின் மேல் ஒரு மஞ்சள் நிற ஒளி வெள்ளம் அலை பாய்ந்தது. ஆவி, வெண்பனி மூட்டமாய் மேலுயர்ந் தது.


“ஹேய், உன்னைத்தானே பையா? விளக்கு போட்டாகி விட்டது. இன்னும் எத்தனை பேர் அங்கேயிருக்கிறார் கள்?”


“இரண்டு பேர்.”          
                          

“இருவரா? ஒருவர் உச்சியில். மற்றொருவர் அடியில். ஹேய் பையா, அந்த விளக்கு மிகவும் வெளிச்சமாக இருக்கிறது. நான் மேலிருந்து அடிநோக்கிப் பாய்ந்து முழுகப் போகிறேன். இந்த விளக்கு உண்மையாகவே மிகவும் பிரகாசமாக இருக்கிறது.”


காது-மூடிய கூந்தலலங்காரத்தில் இருந்த அந்தப் பெண் தன் மகளை அரைக்கண்ணால் பார்த்தாள்.


கடவுளே, இந்தப் பெண் தான் எவ்வளவு புத்திசாலி.’ அன்று மாலை அவன் தனக்கு முன்பாகவே தன் மனை வியையும் மகளையும் தூங்கச் சொல்லி அனுப்பிவைத்து விட்டு, பத்துப் பனிரெண்டு கடிதங்களை எழுதி முடித் தான்.


விடுதியினுள்ளிருந்த நீரூற்றின் உடைமாற்றும் அறை யில் அவன் ஆச்சரியத்தால் சிலையாகி நிலத்தில் வேரோ டியதாய் அசையாமல் நின் றான். வெள்ளைத் தவளை போல் தோற்றமளித்த ஒன்று அந்தப் வழுக்குப்பாறையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது. முகம் கீழ்ப் புறமாயி ருக்க அவள் தன் கைகளை அகற்றிக் கொண்டாள். தன் பாதங்களால் உதைத்தபடி அந்த வழுக்குப்பாறையில் சறுக்கிக்கொண்டே இறங்கினாள். 

அந்த நீரூற்று மஞ்சளாக இளித்தது. அவள் திரும்பவும் பாறையுச்சிக் காய் மேல் நோக்கி ஊர்ந்து சென்று பாறையை இறுகப் பிடித்துக்கொண்டாள். அந்தப் பெண் தான் அவள்.


இடுப்புத்துண்டைக் கைகளால் இறுகப்பற்றிய நிலையில் அவன் படிகளில் விரைந்தோடி மேலேறினான். பின்னி ரவின், அமைதியான இலையு திர்காலப் படிகள்.


’அந்தப் பெண்மணி இன்றிரவு என் குழந்தையைக் கொல்ல வரப் போகிறாள்.’


அவனுடைய மனைவி, கூந்தல் தலையணைக்கு மேல் அலை பாய்ந்தபடியிருக்க, குழந்தையைச் சுற்றிக் கையி ட்ட நிலையில், உறங்கிக்கொண்டிருந்தாள்.


‘ஓ பாறையே, உன்னுடைய அபத்தமான மூட நம்பிக்கை யில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு பெண்ணால் கூட என்னை இந்த அளவுக்கு அச்சுறுத்த முடிகிறது. ஒரு வேளை என்னுடையதேயான மூட நம்பிக்கை _ அதா வது, இது என்னுடைய மனைவி, இது என்னுடைய குழந்தை என்பதாக _ எனக்கே தெரியாமல், நூற்றுக் கணக்கானவர்களை, ஒருவேளை ஆயிரக்கணக்கான வர்களைக் கூட அச்சத்தால் நடுங்கச்செய்துகொண் டிருக்கக் கூடும். அப்படித் தான் இல்லையா பாறையே?’


தன் மனைவியின் மீது ஒரு புதிய, ஆவல் ததும்பும் நேய த்தை அவன் மனம் உணர்ந்தது. அவள் கையைப் பற்றித் தன் பக்கமாய் இழுத்தவாறே அவளை எழுப்பினான் அவன்.


“யேய் _ விழித்துக்கொள்!”



0



மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

மாதொருபாகன் குறித்து
சொல்லத் தோன்றும் சில….
லதா ராமகிருஷ்ணன்
(ஜனவரி 2015பதிவு இணைய இதழில் வெளியாகியுள்ளது)



மாதொருபாகன் கதையைப் பதி விறக்கம் செய்து வாசித்தேன்.

எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக் கிற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும் தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும் போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக, புற பாதிப்புகளை நம் மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமை த்துக் கொள்ள முடியாதா?

இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல் லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும். 

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோவொரு விஷயம் அவரை அலைக்கழித் திருக்கிறது என்று தோன்றுகிறது. 

கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். என்றாலும்].

சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழி பெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பான மாதொருபாகனை ஆண்மையும் பெண்மையும் சரிசம விகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக் கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும். 

உலகத் தரமான கதையைப் படித்து முடிக்கும்போது ஏற்படக்கூடிய catharsis உணர்வு இந்தக் கதையைப் படித்தபோது கிடைக்கவில்லை. 

நாலு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட போது இந்த எதிர்ப்பு எழ வில்லையே, இது ‘இந்துத்வா’ சதி என்பதெல்லாம் பிரச்னையை திசை திருப்பும் செயல். உண்மையான ஊரின் பெயரும், குறிப்பிட்ட சாதியின் பெயரும் கதையில் இடம்பெறுவது தான் உண்மையான பிரச்னை. இந்து நாளிதழுக்கும் இந்துமத எதிர்ப்பாளர்களுக்கும்  இந்தப் படைப்புக்கான உள்ளூர் எதிர்ப்பு தங்களுடைய மோடி அரசு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்புக் கான தக்கதோர் வாய்ப்பாகியிருக்கிறது.

பெண் கணவனைத் தவிர வேறொருவரோடு படுக்கிறாள் என்பதை செரித்துக்கொள்ள முடியாத ஆணின் மேலாதிக்க மனப்பான்மையைத் தான் இந்த கதைக்கான எதிர்ப்பு காட்டு வதாக டெக்கான் க்ரானிக்கிளில் கவிஞர் சல்மா கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது ஒருவித clicheத்தனமான வாதம். இதே வாதத்தை மனைவி திருவிழாவுக்குப் போய்விட்டாள் என்ற விஷயம் தெரிந்ததும் கதாநாயகன் காளி பரிதவித் துப் போவதாகச் சித்தரிக்கும் ககதாசிரியர் மேலும் ஏற்றிவைக்க முடியும். 

கதை நாயகி பொன்னாவை வறடி என்னும்போது அவள் வலித்தழு கிறாள். ஆனால் அவள் ‘வெள்ளைச்சீலைக்காரி’ என்று சக-பெண்ணை ஆங்காரமாக ஏசுகிறாள். காளி யின் சித்தப்பா பாத்திரம் - காளியால் மதிக்கப்படுபவரும், கதாசிரி யரால் சமூகப் பொய்மைகளுக்கு எதிர் நிலையில் காண்பிக்கப் படுபவருமாகிய மனிதர் தான் கூட்டிக்கொண்டு வந்த வெள்ளைச் சீலைக்காரி தாலி கேட்கிறாள் என்பதை கேலி பேசி அவளைத் துரத்திவிட்டதாகக் காளியிடம் தெரிவிக்கிறார். 

அத்தனை அந்நியோன்யமான காளி-பொன்னா தம்பதி தாழ்த்தப்பட்டவர் களுடைய குழந்தையை தத்து எடுத்துக்கொள்வது குறித்து அவர்கள் சாதி வழக்கப்படியேதான் தயக்கங் காட்டுகிறார்கள். 

இது சரி, தவறு என்று ஆசிரியர் கூற்றாக எதுவுமே வருவதில்லை. கதை யில் ஆசிரியர் தன்னைத் துருத்திக்கொண்டு வெளிப்படுத்தக்கூடாது என் பது உண்மைதான். ஆனால், குழந்தையில்லாத பெண்ணைக் கேவலம் செய்யலாகாது என்பதைச் சொல்ல விழையும் ஆசிரியர் மற்ற தரப்பி னரையும் காயப்படுத்தலாகாது என்பதைக் கதாபாத்திரங்கள் மூலமா வது, அல்லது ஆசிரியர் கூற்றாகவாவது புலப்படுத்தியிருக்க வேண் டாமா? கதை சொல்லப்பட்ட விதம் யதார்த்தபாணி நடையில் தான் என்ப தால் வரியிடை வரிகளில் அது சொல்லப்பட்டிருக்க இடமில்லை.

’அந்த நாளில்’ எல்லோரும் சாமி என்று சொன்னாலும், அங்கே பெண் கிடைக்காதா என்று சுற்றுபவர்களும் உண்டு என்பதையும், பொன்னா வின் அண்ணனுமே அப்படிப் போனதுண்டு என்றும் கதை கூறுகிறது. அப்படியெனில், அந்த சடங்கின் அனர்த்தம், போலித்தனம் முழுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஆனால் ஆசிரியர் பொன்னா தனக்கான சாமி யைத் தேர்ந்தெடுத்துப் போவதாய் நயம்படக் கூறுகிறார். 

கதையில் நுட்பமாகச் சொல்லப்பட்ட இடமாக எனக்குப் புலப்படுவது, தனக்கான சாமியைத் தேடும் போக்கில் பொன்னா இளவயதில் தன் நேசத்திற்குரியவனாக இருந்தவனை நினைவு கூர்வதுதான்.

இன்று செய்தித்தாளில் சங்கரின் ‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவு படுத்தியிருப்பதாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கி றார்கள் என்ற செய்தி படித்தேன். இது அவர்களின் உரிமைதானல்லவா? 

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்க ளும் விளிம்புநிலை மனிதர்களும் எப்படியெல்லாம் மதிப்பழிக்கப்படுகி றார்கள் என்று நாம் நன்கறிவோம்.வலியுணரா மனிதர்கள் செய்யும் அதே தவறை வலியுணரும் மனிதர்களும் செய்யலாமா என்ற கேள்வி எழுவ தைத் தவிர்க்க முடியவில்லை.

புத்தகக் கண்காட்சியில் சிற்றரங்கக் கூட்டத்தில் இந்தக் கதை குறித்த தனது எதிர்க்கருத்தை முன்வைத்தமைக்காக எழுத்தாளர் சாருநிவேதி தாவைத் தாக்கத் தயாராய் சில பேர் வந்ததும், அவரைக் கருத்துரைக்க விடாமல் தடுத்ததும் கண்டனத்திற்குரியது.



மாதொருபாகனை முன்வைத்து
மேலும் சில கருத்துப்பகிர்வுகள்
_ லதா ராமகிருஷ்ணன்

  ஒரு எழுத்தாளர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவு செய்து கொண்டார், ஏன் அந்தக் கதைக் கருவைத் தெரிவு செய்து கொள்ள வில்லை; ஏன் இந்தக் கதைக் கருவை இப்படிக் கையாளவி ல்லை, ஏன் அந்தக் கதைக் கருவை அப்படிக் கையாண் டார் என்று கேட்பதெல்லாம் ஒரு வகையில் அபத்தம்தான். அதே சமயம் _

 ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வ தற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும் போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்து மூலம் நேர்த்தி யாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.


தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப் பது சில அறிவுசாலி களின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூக மாற்றத்திற்கான முன்முனைப்பை மெய் யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உரு வாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்த மாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகுமுறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப்படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.


இந்த அடிப்படையில் மாதொருபாகன் புதினத்தை அணுகும் போது, அந்தப் படைப்பு எடுத்துக் காட்ட முனையும், எடுத்து ரைக்க விரும்பும், மையக் கருத்து என்ன? குழந்தையில்லாத தம்பதியர் சமூகத்தில் எதிர்கொள்ளும் மதிப்பழிப்பா? கடவுள் மதம் என்ற பெயரால் மனிதர்கள் மீது என்னவெல்லாம் கட்டு திட்டங்கள், கட்டாயங்கள் காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன என்பதா? இந்த இரண்டும் தான் பிரதானமாக கருத்தோட்டங்களாக கதையில் புலப்படுகின்றன. ஆனால், இரண்டையுமே கையாண்ட விதத்தில் ஏதோவொரு போதா மையை உணர முடிகிறது.


INDIAN FOUNDAITON FOR THE ARTS, BANGALORE  என்ற அமைப்பின் நிதியுதவி (ரூ 3,28,500) பெற்று இரண்டு வருடங்கள் ஆய்வு மேற் கொண்டு இந்த நூலை ஆசிரியர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்த மையத்தின் MISSION ‘is to enrich the Arts in India by providing support to innovati ve projects’ என்று தரப்பட்டிருக்கிறது. கதாசிரியரின் ஆய்வு குறித்து பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.


For research towards the writing of a novelized history of Thiruchenkode in Namakkal district, Tamil Nadu. A town with an ancient history. Thiruchenkode is today marked by its hill temple dedicated to Murugan and Ardhanaarees wara but is also known for its vibrant modern industry. In the course of writing a historical account of Thiruchenkode the author will document references to the town in litera ture, analyze the town’s design and study its ritual and reli gious life.


மேற்குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் அந்த ‘அர்த்த நாரீஸ்வரர்’ கோயில் சடங்கே உச்சக் கட்டமாக ஆசிரியர் முடித்துக்கொண்டுவிட்டதுதான் [அந்தச் சடங்கையும் அவர் முழுவீச்சாக எதிர்க்கவில்லை] உண்மையிலேயே வருத்தத் திற்குரிய விஷயம். தரப்பட்ட வரைச்சட்டகத்திற்குள்ளாக ஊர் குறித்த, அதன் வரலாறு குறித்த, மக்கள் குறித்த, அவர் களின் வாழ்நிலைமை சாதிப் பிரிவினை, குறித்த எத்தனை யோ விஷயங்களை, அவற்றின் அடிப்படையிலான ஆக்க பூர்வமான கருத்துகளைப் பேசியிருக்க முடியும். ஊரின் நில வளம், இயற்கைக்காட்சிகள் குறித்து விவரிக்கும் அளவு கூட ஆசிரியர் வேறு முக்கியமான விஷயங்களை – கோயில் சார் அந்த நம்பிக்கை தவிர்த்து, விரிவாக, in all seriousness,  பேசத் தலைப்படவில்லை.


கதாசிரியராவது ஒரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன் பின்னணியில் ‘அந்தக் காலத் தைய’ கோயில் உற்சவம், அது தொடர்பான சடங்கு , நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அவருக்கு ஆதரவு தெரி விப்பதாக  ‘கருத்துச் சுதந்திரம்’ காக்க வேண்டி 15.1.2015 தேதியிட்ட தினமணி நாளி தழில் வெளியாகியுள்ள தலையங் கம் நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே அமைந் துள்ளது. (பார்க்க : பெட்டிச் செய்தி:)



 தினமணி 15.1.2015 தேதியிட்ட நாளிதழின் தலையங்கம்
அட, பெருமாளே!
By ஆசிரியர்
First Published : 15 January 2015 01:44 AM IST

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெரு மாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்' நாவல் புரிகிறது கோபம் வருகிறது. திருச்செங் கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சு வார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத் தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, பழக் கவழக்கங் களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார். தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாச னம் எழுதவும் முற்பட்டிருக்கிறார்.

பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் "கண்மூடி' ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக் குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம் தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழு வதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த் தமாடுதல் இவை யாவும், "இத்தனை நாள் இல்லா மல் எப்படி இப்போது?' என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகா ரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிட லாகாது.

மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், "இரண்டாம் இடம்' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப் படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. "நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன் தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பல வீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திட காத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ...' என்று குந்தி சொல்வ தாகக் கதை செல்கிறது. 

இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமு தாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது. 

லக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்கு களை எல்லாம் விட்டுவிடு வோம். இன்று "ஃபெர்டிலிடி சென்டர்' எனப்படும் கருவூட்டு மருத்துவ மனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள். அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும் போது, "உங்கள் குடும்ப மரபீனி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனை வியை கருவுறச் செய் யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்ய லாம். உங்களுக்குச் சம்மதமா' என்பதுதான் நேர்மை யான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி. 

பல லட்சம்ரூபாய் செலவுசெய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில் கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமு றைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே, அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடி யுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?

சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல் லாத தையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? 

எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகி விட்டது. ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன் வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்கவேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததே கூட மிகப்பெரிய தவறு. 

சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, "தணிக்கைக் குழு வால் சான்றிதழ் வழங்கப் பட்ட திரைப் படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடை யாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு' என்பது. அதுவே பெருமாள் முருகனின் "மாதொ ருபாகன்' பிரச்னைக்கும் பொருந்தும். 

சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டா லும் ஆணாதிக்க மானு டம் ஏற்க மறுக்கிறது. இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந் திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந் திருக்கும். தமிழனாய் பிறந் தது பெருமாள் முருகனின் தவறு!

              
மேற்படி தலையங்கத்துக்கு வந்த எதிர்வினை களில் ஒன்று பின்வருமாறு:     
            
yampalayam Venkateswaran
22-01-2015 | 19:36:45

தினமணிஇன் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?வாசகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட நீங்கள் விதித்திருக்கும் கட்டுபாடுகளை முத லில் நீங்கள் பின்பற்றுங்கள். எழுத்தாளர்களுக்கும் இருக்கும் உரிமை வாசகர்களுக்கு இல்லையா என்ன? நாகரீகமற்ற வாசகங்களை ஏன் நீங்கள் நீக்குகிறீர்கள். அது வாசகர்களின் எழுத்துரிமை இல்லையா?

///வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரே னும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடு க்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்கு தலை, கட்டுரைகளுக்குப் பொருத்த மில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்தி ரத்துக்கு வாய்ப்ப ளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.///